Sunday, July 19, 2009

முனைவர் பட்டம் தமக்கு மகிழ்ச்சியையும், உத்வேகத்தை அளிக்கிறது - ‍ எழுச்சித்தமிழர்



சென்னை 19, சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள தி ''THE ACADEMY OF ECUMENICAL INDIAN THEOLOGY AND CHURCH ADMINISTRATION'' எனும் உலகத் திருச்சபைகளால் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நிறுவனத்தின் சார்பில் நேற்று எழுச்சித்தமிழருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. "'THE ACADEMY OF ECUMENICAL INDIAN THEOLOGY AND CHURCH ADMINISTRATION'' நிறுவனம் சார்பில் ஒவ்வொரு வருடமும் சமுக பணியிலும் இறையியல் பணியிலும் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு டாக்டர் பட்டம் அளித்து மரியாதை செய்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் இப்படி உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தேர்வு செய்து டாக்டர் பட்டம் அளித்து வந்த இக்குழுமம் தற்போது 21 ம் ஆண்டில் 12 பேரை தேர்வு செய்து டாக்டர் பட்டம் அளித்தது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் அவர்களும் இப்பன்னிரண்டு பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு ''DOCTOR OF DIVINITY'' என்கிற பட்டம் அளித்து கவுரவபடுத்தியது.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் "முனைவர்" தொல்.திருமாவளவன் அவர்கள் பேட்டியின் போது குறிப்பிட்டதாவது, விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டுக்காகவும் கிறித்துவ சிறுபான்மையின மக்களின் உரிமைகளுக்காவும் குரல் கொடுப்பதால் தாம் தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் இப்பட்டம் தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் உத்வேகத்தை அளிப்பதாவும் தெரிவித்தார்.